×

கால்நடை மருத்துவக்கல்லூரியில் தீவன கரணைகள் விற்பனை

நாமக்கல், அக்.25: நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில், கோ-4 தீவன கரணைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய, கால்நடைப் பண்ணை வளாகத்தில், கோ-4 ரக தீவனப் புல்லின் கரணைகள் விற்பனைக்கு உள்ளது. இரண்டு கணு உள்ள ஒரு தீவனக் கரணை 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 16,000 தீவனக் கரணைகள் தேவைப்படும். தீவனக் கரணைகள் தேவைப்படுவோர், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடைப் பண்ணை வளாக பேராசிரியர் மற்றும் தலைவரை அணுகி பெறலாம் என்று, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் மோகன் தெரிவித்துள்ளார்.

Tags : Veterinary Medical College ,
× RELATED கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும்