×

திருச்செங்கோட்டில் கொப்பரை விற்பனை நாளை தொடக்கம்

திருச்செங்கோடு, அக்.25: திருச்செங்கோடு வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நாளை முதல் கொப்பரை விற்பனை செய்யப்பட உள்ளது. திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க தலைமையகத்தில், நாளை (26ம் தேதி) முதல் தேங்காய் கொப்பரை விற்பனை தொடங்குகிறது. டெண்டர் முறையில் தொடங்கும் இந்த விற்பனையில், மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் தங்களிடம் உள்ள கொப்பரை வகைகளை, கூட்டுறவு சங்கத்திற்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன் பெறலாம் என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Coca-Cola ,Tiruchengode ,
× RELATED குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி