×

புதுச்சத்திரம் அருகே குடிநீர் குழாய் வால்வு உடைந்து வீணாகும் தண்ணீர்

சேந்தமங்கலம், அக்.25: புதுச்சத்திரம் அருகே, பொடங்கம் பகுதியில் குடிநீர் குழாய் வால்வு உடைந்து தண்ணீர் நீரூற்று போல் வெளியேறி வீணானது.
மோகனூரில், சீராப்பள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் புதுச்சத்திரம் ஒன்றியம் கோவிந்தம்பாளையம்,  கண்ணூர்பட்டி, சிங்களாந்தபுரம் வழியே நாமகிரிப்பேட்டைக்கு தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பேரூராட்சியில் வசிப்பவர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதில் புதுச்சத்திரம் அருகே, பொடங்கம் பகுதியில் ராட்சத தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குடிநீர் சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று ராட்சத தொட்டியில் அமைக்கப்பட்டுள்ள குழாயின் வால்வு திடீரென உடைந்தது. இதில், லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் பீறிட்டு நீரூற்று போல் பொங்கி எழுந்து வீணானது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘புதுச்சத்திரம் அருகே பொடங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குடிநீர் சுத்திகரிப்பு ெதாட்டியில் அமைக்கப்பட்டுள்ள வால்வுகள் அடிக்கடி உடைந்து விடுகிறது. இது குறித்து பொதுப்பணித்துறையினரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, உடைந்த வால்வுகளை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : newborn ,
× RELATED இரவிகுளம் தேசிய பூங்கா நாளை திறப்பு: 108 வரையாடு குட்டிகள் புதுவரவு