×

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உண்டியல் எண்ணிக்கை

திருவில்லிபுத்தூர், அக். 25:  திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.25 லட்சத்து 24 ஆயிரத்து 104 கிடைத்தது இதுவே முதன் முறையாகும். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்பதால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா ழுழுவதிலும் இருந்து அதிக அளவில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த காணிக்கைகளை கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல்களில் செலுத்துவார்கள். அவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகளை 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

இதையடுத்து நேற்று ஆண்டாள் கோயில் மற்றும் வாளகத்தில் உள்ள பெரியபெருமாள் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி உட்பட அனைத்து உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.25 லட்சத்து 24 ஆயிரத்து 104 கிடைத்தது இதுவே முதன் முறையாகும். இந்த பணியில் கோயில் ஊழியர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்டவர்கள் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், உதவி ஆனையர் அரிகரன், நிர்வாகே அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Trinity Cathedral ,Andal Temple ,
× RELATED குழந்தை வரம் தரும் க்ஷேத்ர பாலகர்