×

வத்தலக்குண்டு அருகே ஒன்றரை மாதமாக குடிநீர் ‘கட்’ ஊராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகை

வத்தலக்குண்டு, அக்.25: வத்தலக்குண்டு அருகே ஒன்றரை மாதமாக தண்ணீர் வரவில்லை என்று கூறி கலைஞர் காலனி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் பழைய வத்தலக்குண்டு ஊராட்சி கலைஞர் காலனியில் 200 வீடுகள் உள்ளன. 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த ஒன்றரை மாதமாக தண்ணீர் வரவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மருதம் மக்கள் கழக மண்டல செயலாளர் கனகராஜ், மாவட்ட மகளிரணி தலைவர் முத்துச்செல்வி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  

வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகாவிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும், ‘‘நூறு நாள் வேலை சரியாக கிடைப்பதில்லை’’ என்று மக்கள் கூறினர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர், 100 நாள் வேலைக்கான பாரத்தை வழங்கி உடனடியாக எழுதிக் கொடுங்கள்; வேலை உடனே கிடைக்கும் என்றார். அதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு அரைமணி நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Tags : Siege ,Panchayat Office ,Wattalakunda ,
× RELATED கீழ வெள்ளகால் ஊராட்சி அலுவலக புதிய...