×

17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடக்குமா?

பழநி, அக்.25 பழநி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென இந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   பழநி அரசு மருத்துவமனை வளாகத்தின் மேற்கு பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு வினை தீர்க்கும் விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அனைத்து தரப்பினரும் நோய் குணமாக வேண்டி வழிபாடு செய்வது வழக்கம். இக்கோயிலில் கடந்த 17 வருடங்களுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இதனைத்தொடர்ந்து கோயிலை புனரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றன. இந்நிலையில் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட கூடாதென வலியுறுத்தி திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் பழநி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலரிடம் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று விஸ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் பழநி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயசேகரிடம் மனு அளித்தனர். மனுவில் கும்பாபிஷேகம் அவசியம் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட மருத்துவ அலுவலர் சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநருடன் ஆலோசித்து சட்டத்திற்கு உட்பட்ட வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

Tags : Kumbabhishek ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா