×

முழு உடல் மருத்துவ பரிசோதனை பெயரில் இன்சூரன்ஸ் மோசடி உயர் அதிகாரிகள் ஆசியோடு நடப்பதாக குற்றச்சாட்டு தமிழக காவல் துறையில்

வேலூர், அக்.24: தமிழக காவல்துறையில் மாஸ்டர் ஹெல்த் செக்கப் என்ற பெயரில் காவல்துறை உயரதிகாரிகள் ஆசியோடு இன்சூரன்ஸ் கேட்பு உரிமம் பெறுவதில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.தமிழக காவல்துறையில் 1,500க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் 1.21 லட்சம் போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மையம், மேற்கு மற்றும் தெற்கு உட்பட 4 காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஐஜி தலைமையிலும், சென்னை, சென்னைப் புறநகர், மதுரை, கோவை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் போலீஸ் கமிஷனர் தலைமையிலும் இயங்கி வருகிறது.அதேபோல் 32 காவல் மாவட்டங்கள் எஸ்பி தலைமையிலும் இயங்குகிறது. இந்த காவல்துறையில் அரசு சார்பில் மருத்துவ காப்பீடு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர்களது, மாதச்சம்பளத்தில் இருந்து மருத்துவக்காப்பீட்டு பிரீமியத்தொகையாக மாதந்தோறும் ₹250 பிடித்தம் செய்யப்படுகிறது.

இதில் 45 வயதை கடந்த போலீசாருக்கு கட்டாயமாக முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் 30 வயது போலீசாரும் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.இதற்கு முக்கிய காரணம், முழு உடல் மருத்துவ பரிசோதனையை ஒருமுறை மேற்கொண்டால் அதற்காக காப்பீட்டுத்தொகையாக ₹3 ஆயிரம் கேட்பு உரிமம் பெறமுடியும். இவ்வாறு தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1.21 லட்சம் போலீசாருக்கு முழு உடல் பரிசோதனை செய்வதன் மூலம் கோடிக்கணக்கில் காப்பீட்டுத்தொகையை கேட்பு உரிமம் மூலம் பெற முடியும். இந்த பணியை காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள், சம்மந்தப்பட்ட மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர் உதவியோடு கேட்பு உரிமம் பெற்று முறைகேடு ெசய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் முன்பு 45 வயதுள்ள போலீசார் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்வது கட்டாயம் என்றனர். தற்போது 30 வயதிலிருந்து மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். மருத்துவ செலவிற்காக போலீசாரின் ஒவ்வொருவரது சம்பளத்தில் இருந்து ₹250 பிடித்தம் செய்யப்படுகிறது.அதோடு இந்த செக்கப் செய்து கொள்வதன் மூலம் ₹3000 வரை இன்சூரன்ஸ் தொகையை கேட்பு உரிமம் மூலம் பெற முடியும் என்பதால், கண்துடைப்பிற்காக செக்கப் என்று கூறிவிட்டு போலீசாரின் விவரங்களை பெற்றுக்கொண்டு தலைமை காவல்துறை உயர் அதிகாரிகள், துறை அதிகாரிகளுடன் சேர்ந்து இன்சூரன்ஸ் பணத்தை கேட்பு உரிமம் பெற்று பங்கு போட்டுக்கொள்கின்றனர்’ என்றனர்.

Tags : Insurer Fraud Authority ,
× RELATED ₹13.12 லட்சம் மோசடி செய்த ஊழியர்...