×

மூணாறு - போடிமெட்டு வரை கொச்சி- தனுஷ்கோடி சாலைப்பணி துவங்கியது

மூணாறு, அக்.23: மூணாறு முதல் போடிமெட்டு வரை நடைபெறும் நெடுஞ்சாலை பணி 32 சதவீதம் முடித்ததாகவும், ஆகஸ்ட் மாதம் முழு பணிகளும் நிறைவு பெறும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மூணாறு முதல் போடிமெட்டு வரை மோசமான நிலையில் காணப்பட்ட சாலைகளை சீரமைக்க கடந்த ஆண்டு கேரளா அரசு நிதி ஒதுங்கியது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கொச்சி-தனுஷ்கோடி  சாலை சீரமைப்பு பணிகள் துவங்கின.  இப்பணிகளுக்கான ஒப்பந்தம் குஜராத் மாநிலத்தில் உள்ள க்ரீன் ஓர்த் என்ற தனியார் கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இப்பணி மூலம் சுமார் 42 கி.மீ வரை தூரம் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட உள்ளது. மேலும் 268 கோடி ரூபாய்க்கு டெண்டர் வழகப்பட்டுள்ளது. 18 மாதங்களில் சாலைப் பணிகள் நிறைவடையும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்த நிலையில் கடந்த மாதங்களில் மூணாறில் பெய்த கனமழை மூலம் பணிகள் தொடர்ந்து நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
தற்ேபாது மூணாறு இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் மூணாறு - போடிமெட்டு சாலைப்பணி விறுவிறுப்புடன் மீண்டும் துவங்கியுள்ளது. 32 சதவீதப்பணிகள்  நிறைவடைந்த நிலையில் முழுப்பணியும்  ஆகஸ்ட் மாதம் நிறைவு பெறும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரி ரெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Tags : roadway ,Munnar - Kodi ,Dhanushkodi ,
× RELATED தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை…கடலில் நீந்திய வாண்டுகள்