×

காரை கிராமத்தில் அரசு தாலுகா மருத்துவமனை நிரந்தரமாக செயல்பட கோரி உண்ணாவிரதம்

பாடாலூர்,அக்.23: ஆலத்தூர் தாலுகா காரையில் அரசு தாலுகா மருத்துவமனை நிரந்தரமாக செயல்பட வலியுறுத்தி அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. அந்த மருத்துவமனையை வட்டார மருத்துவமனையாக தமிழக அரசு அறிவித்தது. பின்னர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்க வசதியாக இருக்கும் என்று காரை வட்டார மருத்துவமனையை இடம் மாற்றம் செய்து பாடாலூர் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்த அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டியும், தொடர்ந்து காரையில் அரசு தாலுகா மருத்துவமனை செயல்பட வலியுறுத்தியும் காரை பஸ் நிறுத்தம் பகுதியில்  அதிமுக வினர் மற்றும் பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காரை கிராமத்தில் அரசு தாலுகா மருத்துவமனை தொடர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி பேசப்பட்டது. தகவலறிந்த சுகாதாரத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரையில் அரசு மருத்துவமனை தொடர்ந்து செயல்படும். அதற்கு தேவையான பணியிடங்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் நிரப்பப்படும். அதன் பின்னர் அனைத்து சேவைகளும் முழுமையாக அளிக்கப்படும் என உறுதியளித்தனர். அதனையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Taluk Hospital ,village ,Kara village ,
× RELATED பூம்பாறை கிராமத்துக்கு போக்குவரத்து வசதி கோரி மனு..!!