×

நினைவு மண்டபத்தில் கோட்டாட்சியர் ஆய்வு ‘கியு எஸ்’ பல்கலைக்கழக தரவரிசையில் தேசிய அளவில் 20வது இடம்

காரைக்குடி, அக்.18: ‘கியூ எஸ்’ இந்தியப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில், அழகப்பா பல்கலைக்கழகம் 20வது இடம் பிடித்துள்ளது என துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன் கூறுகையில், ‘‘பிரிட்டனில் உள்ள ‘கியூ எஸ்’ என்ற நிறுவனம் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி வழங்கல், கட்டமைப்பு, ஆராய்ச்சி, வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர் மாணவர் சதவிகிதம், வேலை வழங்கும் நிறுவனங்களின் நம்பிக்கை ஆகியவற்றை பொறுத்து ‘கியூஎஸ் ரேங்கிங்’ என்ற தரவரிசை வழங்கி வருகிறது. இந்த ‘கியூ எஸ் இந்தியன் யூனிவர்சிட்டி ரேங்கிங்-2019’ தரவரிசையில், இந்தியாவில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் அழகப்பா பல்கலைக்கழகம் 20வது இடத்தையும்,

எஸ் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான பல்கலைக்கழக தரவரிசையில் 104வது இடத்தையும் பெற்றுள்ளது. கடந்த 15ம் தேதி டெல்லியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ்குமார் மற்றும் கியூ எஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் ஜேசன் நியூமென் ஆகியோர் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு ‘கியூ எஸ் தரவரிசை சான்றிதழ்’ வழங்கினார். இச்சான்று பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைக்கல். உலக பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 500 இடங்களில் ஒன்றாக இப்பல்கலைக்கழகத்தை கொண்டு வருவதே இலக்காகும்’’ என்றார்.

Tags : Memorial Hall ,QU ,
× RELATED குமரியில் வள்ளுவர் சிலை- விவேகானந்தர்...