×

திருப்புத்தூரில் அக்.24ம் தேதி மருதுபாண்டியர்கள் 217 வது குருபூஜை

திருப்புத்தூர், அக். 18:  திருப்புத்தூரில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்டு வரும் அக்.24ம் தேதி நடைபெறவிருக்கும் குருபூஜைககாக நடைபெறும் பணிகளை கோட்டாட்சியர் ஆஷா அஜித் நேரில் ஆய்வு செய்தார். வெள்ளையரை எதிர்த்து இந்திய நாட்டின் விடுதலைக்கு முதல் போர்ப்பிரகடனம் செய்து  இன்னுயிர் ஈந்தவர்கள் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள்.இவர்களுடன் சேர்த்து சுமார் 500க்கும் மேற்பட்டவர்களை வெள்ளையர்கள் திருப்புத்தூரில் 1801ம் ஆண்டு தூக்கிலிட்டனர். இவர்கள் கொல்லப்பட்ட 217ம் ஆண்டு நினைவு நாள் அக்.24ம் தேதி  அனுசரிக்கப்படவுள்ளது. இதையொட்டி திருப்புத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் அரசு நினைவு மண்டபத்திலும்,

திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே அவர்கள் தூக்கிலிடப்பட்ட இடமான நினைவு ஸ்தூபியிலும், அரசு சார்பில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்காக மண்டபத்தை வண்ணம் தீட்டுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று தேவகோட்டை கோட்டாட்சியர் ஆஷா அஜித் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து திருப்புத்தூரில் பட்டாசு கடைகளுக்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ள கடைகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் திருப்புத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் கீதா, வட்டாட்சியர் தங்கமணி, பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை, வருவாய் ஆய்வாளர் பழனிக்குமார், விஏஓ மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Muruguppanti ,
× RELATED காய்கறி வியாபாரி ெகாலை வழக்கில் வேன்...