×

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ரூ.1 கோடியில் புதுப்பிப்பு

கயத்தார், அக். 17: பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள கட்டபொம்மன் கோட்ைட ரூ.1 கோடியில் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். கயத்தாறில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபத்தில் அவரது 219வது நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ, கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். கலெக்டர் சந்தீப் நந்தூரி, கோவில்பட்டி ஆர்டிஓ விஜயா, கயத்தார் தாசில்தார் லிங்கராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முருகானந்தம், மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் ஐயப்பன், ஆர்ஐ செல்வராணி, விஏஓ ராஜசேகரன்,கிராம உதவியாளர் அழகர்சாமி  மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை ரூ.65 லட்சத்தில் புதுப்பிக்கப்பட உள்ளது. ரூ.35 லட்சத்தில் சுற்றுச்சாலை என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு  தினத்தைெயாட்டி கயத்தாறு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர்  விநாயகா  ஜி.ரமேஷ், கோவில்பட்டி நகர செயலாளர் டி.பால்ராஜ், திருநெல்வேலி
மாநகர்  மாவட்ட செயலாளர் கே.ஏ.எம்.நிஜாம், திருநெல்வேலி புறநகர் மாவட்ட  செயலாளர்  தி.மு.ராஜேந்திரன், கயத்தார் ஒன்றிய செயலாளர் கொம்பையா, கயத்தார்  நகர  செயலாளர் கட்டபொம்மன் முருகன், மரைக்காயர்  உட்பட ஏராளமானோர் கலந்து   கொண்டனர்.

அமமுக சார்பில் கணபதிபாண்டியன் தலைைமயில்  கட்டபொம்மன்  உருவசிலைக்கு மாலை அணிவித்தனர். தெற்கு  இலந்தைகுளம்பஞ்சாயத்து  முன்னாள்  தலைவர் சுப்பையா, உட்பட நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.
வீரபாண்டிய  கட்டபொம்மன் நினைவு  அறக்கட்டளை நிறுவனர் குட்டி, வீரபாண்டிய கட்டபொம்மன்  பண்பாட்டுக்கழக  நிர்வாகிகள், கட்டபொம்மன்  வாரிசுதாரர் பீமராஜா ஆகியோர்  கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு பணிகளை கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ், கயத்தார் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் செய்தனர்.

நினைவு மண்டபமாக்க வேண்டும் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாட்டு  விடுதலைக்காக போராடிய மாவீரர்களை நான் மதிக்கிறேன். அதனால் தான்  மாமன்னர்  பூலித்தேவருக்கு கழுகுமலை அருகே சிதம்பராபுரத்தில் சிறிய  மணிமண்டபம் கட்டி அவரது சிலை அமைத்துள்ளேன். கயத்தாறில் வீரபாண்டிய   கட்டபொம்மன் அடைக்கப்பட்டிருந்த கட்டிடம் பாழடைந்து விட்டது. அதனை அவரது   நினைவு மண்டபமாக மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக குரல் கொடுத்து  வருகிறேன்  என்றார்.

Tags : Panchalankurichi Fort ,
× RELATED தூத்துக்குடி மருத்துவர் வெற்றி