×

தெற்கு கள்ளிகுளத்தில் கலைத்திறன் போட்டி

ராதாபுரம், அக். 17:  தெற்குகள்ளிகுளம் சமாரியன் அறக்கட்டளை, ஜிஎம் கல்வி அறக்கட்டளை, புனித அலாய்சியுஸ் மேல்நிலைப்பள்ளி சார்பில் சமாரிட்டன் ஷைனிங் ஸ்டார்ஸ் 2018 என்ற தலைப்பில் பள்ளிகளுக்கு இடையிலான கலைத்திறன் போட்டிகள் அலாய்சியுஸ் பள்ளியில் நடந்தது. பள்ளி தாளாளர் ஜான்சன்ராஜ் தலைமை வகித்தார். தெற்குகள்ளிகுளம் துணை பங்குத்தந்தை கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் மரியசிலுவை  வரவேற்றார். பரப்பாடி புனித அன்னாள் மெட்ரிக். பள்ளி தாளாளர் லதிஷ் குத்துவிளக்கேற்றி போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டியில் 19 பள்ளிகள் கலந்து கொண்டன. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் கோட்டார் மறைமாவட்ட இளையோர் நலன் இயக்குநர் ஜெனிபர் எடிசன்  பரிசுகள் வழங்கினார். ஜி.எம்.கல்வி அறக்கட்டளை செயலாளர் ஜோசப் பெல்சி  வரவேற்றார். ஆசிரியர்கள் கிரீபின், ராஜேஷ்செல்வகுமார், பாஸ்கர்தனசிங், பேராசிரியர் பாலமுருகன், தெற்குகள்ளிகுளம் ஊராட்சி செயலாளர் சுமிலா கலந்துகொண்டனர். 12ம் வகுப்பு தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்ற தெற்குகள்ளிகுளம் புனித அலாய்சியுஸ் பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டது.

சீனியர் பிரிவு போட்டியில்   பணகுடி புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும், காரங்காடு புனித அலாய்சியுஸ் மேல்நிலைப்பள்ளி 2வது பரிசையும்,  வள்ளியூர் கெய்ன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3வது பரிசையும்,  வள்ளியூர் ஜோனாத்தான் மெமோரியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 4வது பரிசையும்,  கூடங்குளம் அட்டாமிக் எனர்ஜி சென்ட்ரல் பள்ளி 5வது பரிசையும் பெற்றனர். ஜூனியர் பிரிவு போட்டியில்  வள்ளியூர் கெய்ன்ஸ் மெட்ரிக் பள்ளி முதல் பரிசையும், வள்ளியூர் கெய்ன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி 2வது பரிசையும்,  வள்ளியூர் ஜோனாத்தான் மெட்ரிக் பள்ளி 3வது பரிசையும்,  தெற்கு கள்ளிகுளம் பனிமாதா மெட்ரிக் பள்ளி 4வதுபரிசையும்,  பணகுடி புனித அன்னாள் மெட்ரிக்  5வது பரிசையும் பெற்றன.  சமாரியன் அறக்கட்டளை தலைவர்  ஜெபஸ்டின் ஆனந்த் நன்றி கூறினார்.

Tags : Competition Competition ,Southern Kallikulam ,
× RELATED மாநில திருக்குறள் ஒப்புதல் போட்டி: 2 மாணவிகள் தகுதி