×

மிரட்டலை கைவிட்டு அழைத்து பேச வேண்டும் ஜாக்டோ-ஜியோ வேண்டுகோள்

சிவகங்கை, அக்.12: கோரிக்கைகளை நிறைவேற்றாததால் தொடர் போராட்டம் நடத்தும் ஜாக்டோ, ஜியோ அமைப்பினரை மிரட்டுவதை கைவிட்டு தமிழக அரசு சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ மாவட்ட உயர்மட்டக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் சங்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தீர்மானங்களை விளக்கி பேசினார். ஆசிரியர், அரசு ஊழியர் சங்க உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், தொகுப்பூதிய நியமனத்தை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்.4அன்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விதிகளுக்கு உட்பட்டு தற்செயல் விடுப்பு எடுத்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை மிரட்டும் தொனியில் பேசி வருவதை கைவிட்டு மாநில ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வ வேண்டும். 2003ம் ஆண்டிற்கு பின் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் இறந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களிடம் இருந்து பிடித்த 10 சதவீத தொகையுடன் அரசு பங்களிப்பையும் சேர்த்து உடன் வழங்க வேண்டும். நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை கூட நிறைவேற்ற மறுக்கும் தமிழக அரசின் ஆசிரியர், அரசு ஊழியர் விரோத போக்கினை கண்டித்தும், கோரிக்கைகளை உடன் நிறைவேற்றகட கோரியும் நவ.27ம் தேதி முதல் நடைபெற உள்ள காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திடுவது. அதற்கு முன்னோட்டமாக அக்.13ம் தேதி அன்று சேலத்தில் நடைபெற உள்ள வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED சிவகங்கையில் கோடைகால கால்பந்து பயிற்சி நிறைவு விழா