×

சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கோட்டாட்சியரிடம் மா.கம்யூ. மனு

விருத்தாசலம், அக். 12: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிளைச் செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் கிராம பொதுமக்கள் விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திராவை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
விருத்தாசலம் வட்டம், கோ.பொன்னேரியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 60 வருடங்களுக்கும் மேல் சுடுகாடாக பயன்படுத்தி வந்த இடத்தை, 10க்கும் மேற்பட்ட நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி வருகின்றனர். அதனை  கண்டித்தும், இடத்ைத மீட்க கோரியும் கடந்த 23.2.2013ல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்  நடத்தி மனு கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வருவாய்த்துறையினர் அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆனால்  அதனை ஆக்கிரமிப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளாமல் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் நூறுநாள் வேலைதிட்டம் செய்யும்போது இப்பகுதியில் யாரும் வரக்கூடாது என, ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்களை அடித்தும்,  மிரட்டியும் வருகின்றனர். எனவே அளவின்  படி சுற்றுச்சுவர் அமைத்து சுடுகாட்டை காண்பிக்கவேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கோட்டாட்சியர் சந்தோஷினிசந்திரா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags : cleric ,
× RELATED டெல்லி எல்லையில் சீக்கிய மதபோதகர்...