×

மணப்பாறை அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம், பேட்டரிகள் திருட்டு

மணப்பாறை, அக். 10:   மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில்  முத்துக்குமார் என்பவர் பேட்டரி கடை நடத்தி வருகிறார்.  முத்துக்குமார் நேற்று முன்தினம் இரவு தனது கடையை வழக்கம்போல் மூடி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டவர்கள் முத்துக்குமாரிடம் தகவலை தெரிவித்தனர். கடைக்கு விரைந்து வந்த முத்துக்குமார் உடனடியாக மணப்பாறை  போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு  வந்த மணப்பாறை போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் முகமூடி அணிந்த இருவர் அருகில் இருந்த  ஆட்டோ ஸ்பேர்ஸ் கடையின் பூட்டை உடைத்துள்ளனர். திலிருந்து 3 லிட்டர் ஆயில் கேன், ரொக்க பணம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

 அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த முத்துக்குமார் என்பவரின்  பேட்டரி கடையின் பூட்டை உடைத்துள்ளனர். இதையடுத்து கடையின் உள்ளே சென்ற கொள்ளையர்கள் கடையில் இருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு பேட்டரியை எடுத்துச் சென்றுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து ,சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களையும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் வைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வழக்குப்பதிந்து  தேடி வருகின்றனர்.

Tags : bout ,stores ,mantapara ,theft ,
× RELATED ஆந்திராவில் மதுபானக்கடைகளை மூட உத்தரவு..!!