×

சாலையில் கேஜ்வீல் வாகனத்தை இயக்கினால் ரூ.5,000 அபராதம் பிடிஓ எச்சரிக்கை

கடவூர், அக்.9: கடவூர் ஒன்றியத்தில் உள்ள சாலைகளில் கேஜ்வீல் வாகனத்தை பயன்படுத்தி சேதப்படுத்தினால் அபாரதம் விதிக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கடவூர் பி.டி.ஒ. மனோகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடவூர் ஒன்றியத்தில் லோசான மழை பெய்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாய பணிகளை மும்பரமாக செய்து வருகின்றனர். இதில் ஒருசில விவசாயிகள் நெல் நாற்று நடவு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த பணிக்கு பெரும்பாலானோர் கேஜ்வில் வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் யூனியன் சாலையை சேதம் அடைகிறது. எனவே இனி வரும் காலங்களில் கேஜ்வில் வாகனத்தை பயன்படுத்தி சாலைகளை சேதப்படுத்தினால் உள்ளாட்சி சட்ட விதிமுறைகளின் படி கேஜ்வில் வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் டிரைவர் மற்றும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : road ,Gazzewel ,
× RELATED பழநி கிரிவலப் பாதையில் சுற்றுச்சுவர்...