×

செட்டியூர்- கோணவிளையூர் கருப்பசாமி கோயிலில் இன்று கொடைவிழா

நெல்ை, அக். 9:  பாவூர்சத்திரம் அருகே செட்டியூர்-கோணவிளையூர் கருப்பசாமி கோயிலில் புரட்டாசி கொடை விழா இன்று( 9ம்தேதி) நடக்கிறது.  செட்டியூர் கோணவிளையூர் கருப்பசாமி கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி கொடைவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இதன்படி இந்தாண்டுக்கான கொடை விழா நேற்று மாலை 6மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதையொட்டி இரவு 7மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். 9மணிக்கு வில்லிசையும் நள்ளிரவு 12மணிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. கொடை விழாவில் இன்று (9ம் தேதி) நண்பகல் 12 மணிக்கு குற்றாலத்திலிருந்து புனித நீர் எடுத்து வரும் வைபவமும், தொடர்ந்து உச்சிக்காலபூஜையும் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடக்கிறது. மாலை 6மணிக்கு முளைப்பாரி எடுத்தலும், இரவு 9மணிக்கு மகுட ஆட்டமும் நடக்கிறது. நள்ளிரவு சாமக்கொடை நடக்கிறது. ஏற்பாடுகளை கோணவிளையூர் நாட்டாண்மை வகையறாவினர் செய்துள்ளனர்.

Tags : Chettiar-Konavilaiyur Kallapasamy ,
× RELATED சேரன்மகாதேவியில் பைக் விபத்தில் விவசாயி பலி