×

தா.பழூர் அருகே பைக் மீது பேருந்து மோதியதில் வாலிபர் பலி

தா.பழூர்,அக். 9: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மீன்சுருட்டி புதுதெருவை சேர்ந்தவர் சங்கர் (30), வீரமணி (30). இவர்கள் ஒரு பைக்கில் ஜெயங்கொண்டத்திலிருந்து அணக்கரை நோக்கி சென்று கொபண்டிருந்தனர். அப்போது தேவமங்கலம் சந்தைகுட்டை என்ற இடத்தில் பைக் மீது கண் இமைக்கும் நேரத்தில் அரசு பேருந்து மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் வீரமணி படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.


பைக்கில் சென்றவர் கீழே விழுந்து பலி: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் மதிவாணன் (27). இவர் திருச்சியில் இருந்து தனது சொந்த ஊருக்கு பைக்கில் சென்றார். அப்போது ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் அருகே நேற்று அதிகாலையில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போதையில் பால கட்டையில் படுத்தவர் தவறி விழுந்து சாவு: ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் அருகேயுள்ள பிலிமிசை கிராமத்தை சேர்ந்தவர் பழனிமுத்து (55) இவர் நேற்று மதியம் மது அருந்தி விட்டு அருகில் இருந்த பாலத்தின் கட்டையில் படுத்துள்ளார். அப்போது அருகில் இருந்த வாய்க்காலில் அவர் தவறி விழுந்து இறந்தார். இது குறித்து தகவலறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனைவாரி ஓடையில் மணல் திருடிய 2 பேர் கைது:  செந்துறை அருகே உள்ள  ஆனைவாரி ஓடையில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரத்தில் மணல் அள்ளப்படுவதாக தளவாய் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற தளவாய் போலீசார் ஓடையில் மணல் அள்ளி கொண்டிருந்த பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த டிரைவர் ராஜீவ்காந்தியை கைது செய்து விசாரணை வருகின்றனர்.இதுபோன்று செந்துறை அடுத்த கொடுக்கூர் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த குவாகம் போலீசார் டாரஸ் லாரியில் மணல் கடத்தி செல்வதை பார்த்து அந்த லாரியை தடுத்து நிறுத்தி  லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஓட்டி வந்த முள்ளுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த அஜய் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி மோதி மருத்துவ ஊழியர் படுகாயம்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் காலனி தெருவை சேர்ந்தவர் முருகன்(44), இவர் செந்துறை அரசு மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் தனது வீட்டில் இருந்து செந்துறை நோக்கி பைக்கில்  வந்து கொண்டு இருந்தார். பெரியாக்குறிச்சி சிமென்ட் ஆலை சுண்ணாம்புக்கல் சுரங்கம் அருகே வந்தபோது  எதிரே சிமென்ட் ஆலையை நோக்கி சென்ற லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் செந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Thalur ,
× RELATED 3 நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி...