×

லேகியங்களும் பயன்களும்!

நன்றி குங்குமம் டாக்டர்

வெண் பூசணி லேகியம்: வயிற்றுப் புண், உடல் உஷ்ணம் இவற்றை நீக்கி இளைத்த உடல் தேற்றவும், உடல் பலவீனம் நீங்கிடவும் வெள்ளைப் பூசணிக்காயை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் இம்மருந்து ஒரு உடல் தேற்றி மருந்தாகும்.கரிசாலை லேகியம்: ரத்த சோகை, கண்பார்வைக் குறைவு, வயிற்றுக் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள், மஞ்சள் காமாலை நோயிலிருந்து உடல் தேற்றி மருந்தாக பயன்படும். பசியை அதிகரித்து ஊட்டங்கள் முழுமையாக உட்கிரகிக்கப்படவும் கரிசாலை உதவுகிறது. குடற்கிருமிகளையும் வெளியேற்றும். சுவாசப் பிரச்னைகளுக்கான உணவாக கரிசாலையைப் பயன்படுத்தலாம்.

வில்வாதி லேகியம்:  பித்தம், வாந்தி, மயக்கம் இவற்றை நீக்கக்கூடியது. அஜீரணம், வயிற்று உப்புசம் இரண்டுக்கும் வில்வப் பட்டையைக் கொண்டு செய்யும் வில்வாதி லேகியம் நல்ல மருந்து. சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, வில்வம் ஓர் அற்புத மூலிகை.திப்பிலி லேகியம்: ரத்தத்தில் கலந்துள்ள கழிவுகளை நீக்கி ரத்த சுத்தியாக செயல்படும். சுவாசம், வயிற்றுவலி, பெருவயிறு, ஜுரம், பாண்டு இவைகளை குணப்படுத்தும். முகத்தில் உண்டாகும் கருத்த மச்சம், சிவப்பு மச்சம், கரும்புள்ளிகள் போன்றவை குணமாகும்.

அமிர்த சஞ்சீவி லேகியம்:
2 முதல் 5 கிராம் வரை தினம் இருவேளை சாப்பிட்டு வர சர்க்கரை நோய், அஸ்திசுரம், சீதபேதி, வாயு, சோகை, காமாலை முதலிய நோய்கள் தீரும். நரம்புத் தளர்ச்சியை நீக்கும். இளைத்த உடல் தேறவும், உடல் பலவீனம், சோர்வு இவை அகலவும் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட உடல் உள்ளுறுப்புகள் பலப்படுத்தவும் கூடியது.

நமசிம்ம லேகியம்: நாடி நரம்புகளைப் பலப்படுத்தி உடலின் சீர் குலைந்த தாதுக்களை கூட்டி உடலைத் தேற்றக்கூடிய ஒப்பற்ற மருந்து. மூலிகைகளின் வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

தாது புஷ்டி லேகியம்: ஆண்மை குறைவு நீங்கும். நரம்புத் தளர்ச்சியை நீக்கி நரம்புகளுக்கு ஊக்கமும் மற்றும் நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது.  மேலும், உடல் மிகவும் தளர்வுற்று பாதித்த நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு நல்ல வலிமையைத் தரும்.

தொகுப்பு : எஸ்.மாரிமுத்து, சிட்லபாக்கம்.

Tags :
× RELATED டீடாக்ஸ் டயட்