×

கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திருச்சி பிஷப் கல்லூரி பேராசிரியர் பணி நீக்கம்..!!

திருச்சி: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றும் பால் சந்திரமோகன் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தியதை அடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்த்துறையில் பட்ட மேற்படிப்பு படிக்கும் சில மாணவிகள் பால் சந்திரமோகன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி 5 பக்க அளவிலான புகார் மனுவை கல்லூரி முதல்வருக்கு அனுப்பினர். அதில், பால் சந்திரமோகன் வகுப்பறையில் மிக நெருக்கமாக அமர்ந்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும், பாலியல் சீண்டர்களில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர். வகுப்பறையில் குறைவான எண்ணிக்கையில் மாணவிகள் இருந்ததால் தனது அறைக்கு வரும்படி கட்டாயப்படுத்தியதாகவும் மாணவிகள் தங்கள் குற்றச்சாட்டில் கூறியுள்ளனர். அதேத்துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றும் நளினி, துறைத் தலைவர் பால் சந்திரமோகனுக்கு உடந்தையாக இருப்பதாகவும் மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் கல்லூரி-யில் இருந்தே வெளியேற விரும்புவதாகவும் அவர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர் ஜெயந்திராணி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் குற்றச்சாட்டுக்குள்ளான பால் சந்திரமோகன் மற்றும் உதவி பேராசிரியை நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி கல்லூரி முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதன் அடிப்படையில் பால் சந்திரமோகன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். உதவி பேராசிரியை நளினி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறை முதற்கட்ட விசாரணையை தொடக்கியிருக்கிறார்கள். …

The post கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திருச்சி பிஷப் கல்லூரி பேராசிரியர் பணி நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Trichy Bishop College ,Trichy ,Paul Chandramoghan ,Tamil ,Tadu ,Trichy Bishop Heber College ,Dinakaran ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்