×
Saravana Stores

தவான் தலைமையில் இலங்கை சென்றது இந்திய அணி

மும்பை: இலங்கைக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட உள்ள ஷிகர் தவான் தலைமையிலான  இந்திய அணி நேற்று கொழும்பு போய்ச் சேர்ந்தது.  விராத் தலைமையிலான இந்திய அணி  இங்கிலாந்து சென்றுள்ளது. அங்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில்  இங்கிலாந்துக்கு எதிராக  டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. முக்கிய வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்தில் இருக்கும் நிலையில்,  ஜூலை மாதம் இந்திய அணி இலங்கை செல்லும் என்ற பிசிசிஐ அறிவித்தது.  அதற்காக ஷிகர் தவான் தலைமையில் புதிய அணியை பிசிசிஐ அறிவித்தது.  இங்கிலாந்து சென்ற அணியில் இடம் பிடிக்காத ஹர்திக் பாண்டியா, பிரித்வி ஷா, புவனேஸ்வர் குமார், மணீஷ் பாண்டே என  என 20 பேர்  இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர்.  அவர்களில்  3வது முறையாக தேர்வாகி உள்ள  தமிழக வீரர்  வருண் சக்கரவர்த்தி உட்பட 6பேர் புதியவர்கள். கூடவே அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட்  புதிதாக பொறுப்பேற்றுள்ளார்.  அணியுடன் செல்ல கூடவே வலை பயிற்சிக்காக 5பந்து வீச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இவர்கள் அனைவரும் கடந்த 2 வாரங்களாக மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.  தனிமைப்படுத்துதல் முடிந்ததும்  தவான் தலைமையிலான இந்திய அணி தனி விமானம் மூலம்  நேற்று இலங்கை சென்றது.  அடுத்த சில  மணி நேரங்களில்  கொழும்பு போய்ச்  சேர்ந்தனர். அங்கு கொரோனா பரிசோதனைக்கு பிறகு நட்சரத்திர விடுதிகளில் தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறைந்தது ஒரு வாரம் தனிமை முடிந்ததும்  இந்திய அணி பயிற்சியை தொடங்கும்.இந்திய அணி அங்கு தலா 3 ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது.   ஒருநாள் ஆட்டங்கள் ஜூலை 13, 16, 18 தேதிகளிலும், டி20 ஆட்டங்கள் ஜூலை 21, 23, 25 தேதிகளிலும் நடைபெறும்….

The post தவான் தலைமையில் இலங்கை சென்றது இந்திய அணி appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Dawan ,Mumbai ,India ,Shikar Dawan ,ODI T20 ,Colombo ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை