ஹூஸ்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி கடற்கரையை ஒட்டியுள்ள 12 மாடி அடுக்குமாடி கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த வியாழக்கிழமை இடிந்து விழுந்தது. இதில் 150 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 9 சடலங்கள் மீட்கப்பட்டு, மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த குடியிருப்பில் இந்தியாவை சேர்ந்த விஷால் படேல் (42), அவரது மனைவி பாவ்னா படேல் (38) அவர்களது ஒரு வயது மகள் அஸ்வினி படேல் ஆகியோர் வசித்தது தெரியவந்துள்ளது. இவர்களும் கட்டிட விபத்தில் சிக்கினார்களா என விசாரணை நடந்து வருகிறது….
The post அமெரிக்க கட்டிட விபத்து 1 வயது மகளுடன் இந்திய தம்பதி மாயம் appeared first on Dinakaran.
