×

டெபாசிட் மிஷினில் 15.71 லட்சம் திருடியது எப்படி? 19 விநாடிக்குள் பணத்தை எடுத்து போலீசைஅசர வைத்த கொள்ளையன்

* 2 மணிநேரம் நடித்து காட்டினான்* அரியானாவில் மேலும் ஒரு குற்றவாளி கைதுசென்னை: பெரியமேடு ஏடிஎம் டெபாசிட் இயந்திரத்தில் இருந்து 15.71 லட்சம் திருடியது எப்படி என்று கொள்ளையன் அமீர் அர்ஷ் நேற்று போலீசாருக்கு நடித்து காட்டினான். சென்னையில் எஸ்பிஐ வங்கிக்கு ஜப்பான் நிறுவனம் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தை வடிவமைத்து கொடுத்து. இந்நிலையில் இந்த இயந்திரத்தில் உள்ள குறைபாடுகளை, எஸ்பிஐ வங்கியில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். இதை தங்களுக்கு நெருக்கமான கொள்ளை கும்பலிடம் தெரிவித்தது. அவர்கள் டெபாசிட் இயந்திரத்தில் பணத்தை எடுத்துவிட்டு, சென்சார் மூலம் அதை மறைத்தனர். இதனால், அந்த பணம் உரிய வாடிக்கையாளரின் கணக்கிற்கே சென்றுவிடும். இதனால் வங்கிக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இதுகுறித்து ராமபுரம் எஸ்பிஐ வங்கி கிளை மேலாளர் சம்பவம் குறித்து ராயிலா நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அப்போதுதான் இந்த கும்பல் சென்னையில் வேளச்சேரி, விருகம்பாக்கம் உள்பட 15 இடங்களில் 45 லட்சம் ஐப்பான் இயந்திரம் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களில் கொள்ளையடித்தது போலீசாருக்கு தெரியவந்தது.  அதைதொடர்ந்து வங்கி கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் கமிஷனர் கண்ணன், தி.நகர் துணை கமிஷனர் அரிகிரன் பிரசாத் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்களின் முதல் கட்ட விசாரணையில் வங்கி நூதன கொள்ளையில் அரியானா மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து விமானம் மூலம் அரியானா சென்ற தனிப்படையினர், 23ம் தேதி வங்கி கொள்ளையில் ஈடுபட்ட அமீர் அர்ஷ் என்பவனை கைது செய்து, அவனிடம் இருந்து 4.50 லட்சம் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் பின்னர் அமீர் அர்ஷை 5 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில், அமீர் அர்ஷ் தான் உள்பட 9 பேர் தமிழகம் முழுவதும் 21 இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசாரிடம் ஒப்புக் கொண்டான். விசாரணையில், அவன் அளித்த தகவலின் படி  அரியானா மாநிலம் பல்லப்கர்க் கிராமத்தை ேசர்ந்த வீரேந்திர ராவத்(23) என்ற கொள்ளையனை கைது செய்து வரும் 9ம் தேதி வரை சென்னையில் சிறையில் அடைத்துள்ளனர்.  வழக்கின் தீவிர விசாரணையில், இக்கொள்ளையில் தொடர்புடைய 3வது நபரான நசீர் உசேன்(22) என்பவனை கைது செய்தனர். அவனிடம் இருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய அரியானா பதிவு எண் கொண்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவனை சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டு தலைமறைவாக உள்ள சதகத்வுல்லாகான் மற்றும் 6 பேரை அரியானாவில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.  இதற்கிடையே, காவலில் எடுக்கப்பட்ட அமீர் அர்ஷ்த்தின் 4ம் நாள் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, போலீசார் 15.71 லட்சம் பணத்தை 3 நாட்களில் 190 முறை வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன முறையில் கொள்ளையடித்த பெரியமேடு பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவனிடம் எந்த ஏடிஎம் கார்டு கொடுத்தாலும் 15 முதல் 19 விநாடிக்குள் டெபாசிட் இயந்திரத்தில் இருந்து பணத்தை போலீசார் முன்னிலையில் எடுத்து காட்டினான். இதைபார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பணம் யாருடைய கணக்கிலும் குறையாமல், வங்கியில் இருந்து மட்டும் கொள்ளைபோனது தெரியவந்தது. பணம் எடுத்தது குறித்து அனைத்தும் போலீசார் விடியோ பதிவு செய்து கொண்டனர். இந்த வழக்கில் இரண்டாவது நபராக கைது செய்யப்பட்ட வீரேந்திர ராவத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த தரமணி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தனர்….

The post டெபாசிட் மிஷினில் 15.71 லட்சம் திருடியது எப்படி? 19 விநாடிக்குள் பணத்தை எடுத்து போலீசைஅசர வைத்த கொள்ளையன் appeared first on Dinakaran.

Tags : Ariana ,Dinakaraan ,
× RELATED டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு:...