×

கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை: மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்..! மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எச்சரிக்கை

டெல்லி: கொரோனா 2வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்துவிட்டன, ஆனால் 1.5 வருட அனுபவம் என்னவென்றால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் 2-ம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய சூழலில், கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதக 37 ஆயிரத்து 566 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,03,16,897 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புகளுக்கு நேற்று ஒரே நாளில் 907 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,97,637 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பரவல் குறைய தொடங்கி உள்ளதால் இரண்டாம் அலை முடிவடைந்து விட்டது என்று பலரும் சகஜநிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை என்றும், பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்து விட்டது உண்மைதான். ஆனால், ஒன்றரை வருடகாலமாக இருந்த கொரோனா பாதிப்பின் அனுபவங்கள் எங்களை எந்த சூழ்நிலையிலும் ஓய்வு எடுக்க கூடாது என்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது. அதிர்ஷ்டவசமாக, கடந்த 6 மாதங்களாக தடுப்பூசியும் கிடைக்கிறது. கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதன் மூலமும் முறையாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமும் நாம் கொரோனாவை வெல்ல வாய்ப்புள்ளது” என்று அவர் தெரிவித்தார். …

The post கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை: மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்..! மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Corona 2nd wave ,Union Minister ,Harshwarden ,Delhi ,Union Health Minister ,Harshwardhan ,Corona ,Dinakaran ,
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...