×

ராஜஸ்தானில் மரச்சாமான்கள் தொழிற்சாலையில் தீ விபத்து: உதய்பூரில் பல மீட்டர் தொலைவுக்கு எழும்பிய புகையால் பீதி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மாரச்சாமான்கள் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. உதய்பூரில் தீவிபத்து ஏற்பட்டு மரச்சாமான்கள் தொழிற்சாலையில் உருவான புகை வானில் பல நூறு மீட்டர் தொலைவுக்கு சென்றதால் பெரும் பீதி ஏற்பட்டது. புகை மண்டலம் சூழ்ந்ததால் சுற்றுவட்டார  மக்கள் அவசர அவசரமாக வெளியேறினர். ஒருசிலர் உள்ளே சிக்கிய உறவினர்களை காப்பாற்ற கோரி முழக்கம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தீவிபத்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற வீரர்கள் தீயை அணைக்க முயற்சி எடுத்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக தீவிபத்தில் எந்த வித அம்சாம்பிவிதமும் ஏற்படவில்லை. தீவிபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழப்பு குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 


Tags : Rajasthan ,Udaipur , Rajasthan, Furniture, Factory, Fire
× RELATED நகை, பணம் கொள்ளை அடித்த விவகாரத்தில் நகை கடையை வேவு பார்த்தவர் கைது