×

பல்லக்கு வாகனத்தில் உற்சவர் 5 மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐ.பி.எல் போட்டி ஒளிபரப்பு: நிர்வாகம் தகவல்

சென்னை: சென்னையில், ஐந்து மெட்ரோ நிலையங்களில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பப்படும். மேலும், போட்டி நடைபெறும் நாளில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானத்துக்கு ரசிகர்கள் இலவசமாக பேருந்தில் அழைத்து செல்லப்படுவார்கள் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐ.பி.எல் சீசன் 16வது பதிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்  மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவை இணைந்து ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதத்தில் சென்னையில் நடக்கும் அனைத்து போட்டி நாட்களிலும், ரசிகர்கள் எளிதாக பயணத்தை ஏற்பாடு செய்துள்ளன. இதன்மூலம், ரசிகர்கள் ஐ.பி.எல் போட்டிகளுக்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கும், போட்டி நடைபெறும் இடத்திலிருந்து அரசு எஸ்டேட் மெட்ரோ ஸ்டேஷன் வழியாக திரும்புவதற்கும் ரயில் டிக்கெட்டாகப் போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தலாம்

கூடுதலாக, சி.எம்.ஆர்.எல் அரசு தோட்ட மெட்ரோ நிலையத்திலிருந்து ஐ.பி.எல் இடத்திற்கு ஃபீடர் பஸ் சேவையை வழங்கும். போட்டி நாட்களில் இரவு நேரத்தில் சி.எம்.ஆர்.எல் கூடுதலாக ரயில் இயக்கத்தை நீட்டிப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில்  போட்டி நடக்கும் நாட்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பாதுகாப்பாக செல்ல ரயில் பயணம் ஏற்பாடு ெசய்யப்பட்டுள்ளது.  சி.எம்.ஆர்.எல் மற்றும் எம்.ஸ் மார்க் மெட்ரோவுடன் இணைந்து ஏப்ரல் 3ம் தேதி முதல் ஐ.பி.எல் போட்டிகளை நந்தனம், வடபழனி, விம்கோ நகர், திருமங்கலம் மற்றும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ஆகிய ஐந்து மெட்ரோ நிலையங்களில் உள்ள ராட்சத எல்.இ.டி திரைகளில் நேரடியாக திரையிட ஏற்பாடு செய்துள்ளது. போட்டிகளைப் பார்ப்பதற்கு தனிக் கட்டணம் இல்லை என்றும், மெட்ரோ பயணத்திற்கும், மெட்ரோ நிலையங்களில் தங்குவதற்கு, ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய் மட்டுமே கட்டணம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.



Tags : IPL ,Utsawar , Broadcasting of IPL match at Utsawar 5 metro station on palanquin vehicle: Administration Information
× RELATED ஐபிஎல் தொடரின் வெற்றி தோல்வி கணக்கு