×

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்யச் செல்லும் முத்தமிழ்செல்விக்கு நிதியுதவி ரூ.15 லட்சம் வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வீராங்கனை நன்றி!

சென்னை: உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்யச் செல்லும் தமிழ்நாட்டைச் சார்ந்த முத்தமிழ்செல்விக்கு தன்னார்வலர்கள் உதவியுடன் கூடுதல் நிதியுதவி ரூ.15 லட்சம் வழங்கிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு
வீராங்கனை நன்றி தெரிவித்தார்.

சென்னையைச் சார்ந்த முத்தமிழ்ச் செல்வி 2023-ஆம் ஆண்டு ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம் -மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்படும் தேர்வு செய்யப்பட்டுள்ள குழுவினருடன் இணைந்து உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை செய்ய திட்டமிட்டு 02.04.2023 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு நேபாளம் செல்கிறார்.

நேபாள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ள இந்த எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் பங்கேற்க நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு அரசு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நிதியுதவியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை 28.03.2023 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

இந்நிலையில் சிகரம் ஏறுவதற்கு கூடுதல் நிதியுதவி தேவைப்படுவதால் மேலும் நிதியுதவி வழங்கிடுமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் மீண்டும் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து தன்னார்வலர்கள் மூலம் கூடுதலாக ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து வீராங்கனைக்கு முத்தமிழ்ச் செல்வி கூறும்போது:- எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண் நான். எனது கனவை நனவாக்கும் வகையில் நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிகரம் ஏறுவதற்கு நிதியுதவி வேண்டி மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நிதியுதவியாக ரூபாய் 10 லட்சம் வழங்கினார்.

இந்நிலையில் சிகரம் ஏறுவதற்கு நண்பர்கள்,உறவினர்கள் நிதியுதவி வழங்கினார்கள் ஆனாலும் கூடுதலாக ரூபாய் 15 லட்சம் தேவைப்பட்டது. இது தொடர்பாக அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில் தன்னார்வலர்கள் மூலம் கூடுதலாக ரூபாய் 15 லட்சம் வழங்கிட ஏற்பாடு செய்தார்கள். அதற்காக அமைச்சரு க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என முத்தமிழ்ச் செல்வி தெரிவித்தார்.

Tags : minister ,udyanidhi stalin ,kutamishelvi , The actress thanks Minister Udayanidhi Stalin for giving Rs 15 lakh to Muthamilselvi who is going to climb Everest!
× RELATED பிரதமர் மோடியிடம் அணுசக்தி, விண்வெளி...