×

மணப்பாக்கத்தில் பரபரப்பு; ஓசியில் பிரியாணி கொடுக்காத ஊழியர்களுக்கு சரமாரி வெட்டு: 2 வாலிபர்களுக்கு வலைவீச்சு

ஆலந்தூர்: இலவசமாக பிரியாணி கொடுக்க மறுத்ததால் ஊழியர்கள் இரண்டு பேரையும் வெட்டிவிட்டு தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மணப்பாக்கம் மவுன்ட் பூந்தமல்லி சாலையில் பிரியாணி கடை நடத்தி வருபவர் கவுதம். நேற்றிரவு இவரது கடைக்கு போரூரை சேர்ந்த ஜெகன் (26), அஜித் (28 )ஆகியோர் சாப்பிட வந்துள்ளனர். பின்னர் அவர்கள் பிரியாணி வாங்கி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் அங்கிருந்து சென்றுள்ளனர். இதையடுத்து கவுதம், அவர்களை மறித்து, ‘’பிரியாணிக்கு பணம் கொடுங்கள்’ என்று கேட்டுள்ளார்.

அப்போது ஊழியர்கள் அருள்ராஜ், சாமுவேல் ஆகியோரும் வந்து 2 பேரையும் மறித்து பணம் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த ஜெகன், தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் அருள்ராஜின் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். ஊழியர் சாமுவேலை அஜித்குமார் என்பவர் கல்லால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுசம்பந்தமாக கடை உரிமையாளர் கொடுத்த புகாரின்படி, நந்தம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து ஜெகன், அஜித் ஆகியோரை தேடி வருகின்றனர்.Tags : Bustle ,Manapakkam , Bustle in Manapakkam; Barrage cut to employees who did not give biryani in OC: 2 youths netted
× RELATED மயிலாடுதுறை அருகே பரபரப்பு; மாயமான...