திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே செல்போன் திருடனை திருநின்றவூர் போலீசார் விரட்டி பிடித்தனர். இரவு ரோந்தில் ஈடுபட்ட ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், காவலர் பூபதி ஆகியோர் திருடனை விரட்டி சென்று பிடித்தனர். வழி கேட்பதுபோல் நடித்து செல்போனை திருடி விட்டு தப்பியோடிய இளைஞர்களில் ஒருவரை மடக்கிபிடித்தனர். மற்றொரு திருட்டில் ஈடுபட்டபோது போலீசை கண்டதும் பைக்கை விட்டு ஓடிய இருவரில் தீபக் சிக்கினார்.