கேரளாவில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது. கேரளாவில் கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு லிட்டருக்கு ரூ.2 உயர்த்த தீர்மானிக்கப்பட்டது.   ஏப்ரல் 1ம் தேதி முதல் விலை உயர்த்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று முதல் பெட்ரோல், டீசல் உள்பட பொருட்களுக்கு விலை உயர்த்தப்படுகிறது.

தற்போது கேரளாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.98ம் டீசலுக்கு ரூ.96.52 ஆகவும் உள்ளது. இன்று முதல் பெட்ரோல் விலை ரூ.109.98 ஆகவும் டீசலுக்கு 98.52 ஆகவும் உயரும்.

Related Stories: