சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு:பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்ட நிலையிலும், ஒன்று முதல் ஒன்பது வரையிலான வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக தேர்வுகளை நடத்தி, ஏப்ரல் 2ம் வாரத்திலிருந்து கோடை விடுமுறை அளிக்க வேண்டும்.