×

கொல்கத்தா உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்து வந்த டி.எஸ்.சிவஞானம், கடந்த 2021 அக்டோபர் 25ம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். மூத்த நீதிபதியாக செயல்பட்டு பல்வேறு வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை வழங்கி வந்துள்ளார். இந்த நிலையில் கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த பிரகாஷ் ஸ்ரீவத்ஸவா நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கியுள்ளார். நீதிபதி டி.எஸ்.சிவஞானம் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது தந்தை டாக்டர் சுப்பையா. சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த டி.எஸ்.சிவஞானம் சென்னை சட்டக் கல்லூரியில் 1986ல் சட்டப்படிப்பை முடித்தார்.

Tags : D.S.Sivagnanam ,Chief Justice ,Calcutta High Court , D.S.Sivagnanam appointed as Chief Justice of Calcutta High Court
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிணையில் வெளியே வர இடைக்காலத் தடை