திமுக அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் இதுவரை 7 ராஜகோபுரங்கள் 38 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: ரூ.சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய கும்பகோணம் அன்பழகன் (திமுக), ‘‘கும்பகோணம் தொகுதி சாக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அமிர்தகலசநாதர்சுவாமி திருக்கோயில் குளத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் கட்ட அரசு ஆவண செய்யுமா” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில் ‘‘ஏற்கனவே 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. யாரும் பங்கேற்கவில்லை.

திருத்திய மதிப்பீட்டுடன் ஒப்பந்த புள்ளி விரைவில் கோரப்படும். 25 லட்சம் ரூபாய் செலவாகும் என கண்டறியப்பட்டுள்ளது. ஆணையர் பொது நல நிதியில் இருந்து குளத்தை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்‘‘ என்றார். மீண்டும் பேசிய கும்பகோணம் அன்பழகன், ‘‘கும்பேஸ்வரர் ஆலயம் மொட்டை கோபுரமாக உள்ளது, அதை 7 கலசங்கள் கொண்ட  ராஜகோபுரமாக கட்டித்தர அரசு முன்வருமா, மகாமகம் திருவிழா போல மாசி மக திருவிழாவிற்கும் அரசு விழாவாக நடத்தி, உள்ளூர் விடுமுறை விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதற்கு அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், ‘‘கும்பேஸ்வரர் கோயில் மொட்டை கோபுரமாக உள்ளது.

ராஜகோபுரம் அமைப்பது குறித்து தொல்லியல் துறை வல்லநர்கள் மூலம் சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். மாசி மகம் என்பது ‘‘அறிவிக்கப்பட்ட திருவிழாவாக’’ வரவில்லை, எனவே உள்ளூர் விடுமுறை என்பது மாவட்ட நிர்வாகம் அரசும் எடுக்கும் முடிவு, அதற்கு துறைக்கும் சம்பந்தமில்லை. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 7 ராஜகோபுரங்கள் 38 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Related Stories: