சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் சாலையை சுத்தம் செய்யும் போது திடீரென தீப்பற்றிய மாநகராட்சி வாகனம்..!!

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் சாலையை சுத்தம் செய்யும் மாநகராட்சி வாகனம் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. கொருக்குப்பேட்டையில் இருந்து ராயபுரம் சாலைகளை சுத்தம் செய்யும் பெருநகர சென்னை மாநகராட்சியின் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரில் உள்ள மேம்பாலத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென புகை வந்தது. அதனை கண்ட ஓட்டுநர் லாரியை விட்டு உடனடியாக இறங்கி லாரியை சோதனை செய்தபோது லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை கண்ட ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், லாரியில் பற்றிய தீயானது மளமளவென லாரி முழுவதும் பற்றி ஏரிய தொடங்கியது. இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து பரபரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இருப்பினும் அந்த வழியாக சென்று கொண்டிருந்த மாநகராட்சி தண்ணீர் லாரியினை கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். மாநகராட்சி வாகனம் திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கொருக்குப்பேட்டையில் மாநகராட்சி வாகனம் திடீரென்று சாலையில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: