×

மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை: மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளதாக முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: ராகுல்காந்தியை கைது செய்து சிறையில் அடைக்ககூடிய எழுதப்படாத ஒரு சட்டத்தை மோடி தலைமையிலான ஆட்சி அமல்படுத்தி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசியதால்தான் இதுபோன்ற  நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடி, அதானிக்கு ஏஜென்ட் ஆக செயல்படுகிறார்.

இந்திய நாட்டையே அதானிக்கு அடகு வைத்து விட்டார் மோடி. ஒரு நபரை காப்பாற்ற ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையே செயல்படாமல் தடுத்து வருகிறார். தன்னை எதிர்த்து பேசினால் பழி வாங்குவேன், தீர்த்து கட்டி விடுவேன் என்கின்ற பாசிச ஆட்சியை மோடி நடத்தி வருகிறார். மோடி ஆட்சியில், 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Modi ,Mutharasan , 23 PSUs sold in Modi regime: Mutharasan alleges
× RELATED பாசிச ஆட்சி வன்மம் தொடரக் கூடாது: முத்தரசன் கண்டனம்