×

ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் அப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான்

துபாய்: ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் அப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டதாக காரணமாக ரஷீத் கான் புல்லிபட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார்.

பாகிஸ்தான் - அப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் துபாயில் நடைபெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் அப்கானிஸ்தான் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2வது டி20 போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது.  இந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இலக்கை எட்டி அப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 அப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது இதுவே முதல் முறையாகும்.  

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தப்போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக செயல்பட்ட ஃபசல்ஹக் பரூக்கி மற்றும் ரஷீத் கான் ஆகியோர் இருவரும் இணைந்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் காரணமாக அப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் 710 புள்ளிகள் பெற்று இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறினார். அப்கானிஸ்தான் வீரரான ஃபசல்ஹக் பரூக்கி 692 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.

Tags : Afghanistan ,Rashid Khan ,ICC ,T20 , Afghanistan's Rashid Khan has climbed to the top spot in the ICC T20 bowlers list
× RELATED பூரன் அதிரடி ரன் குவிப்பு: வெஸ்ட் இண்டீஸ் சாதனை வெற்றி