சென்னை சாலிகிராமத்தில் போலீஸ் என்று கூறி ஜெராக்ஸ் கடையில் கைவரிசை காட்டிய இளைஞருக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் போலீஸ் என்று கூறி ஜெராக்ஸ் கடையில் கைவரிசை காட்டிய இளைஞருக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகிறது. விநாயகம் என்பவரின் ஜெராக்ஸ் கடைக்கு வந்த இளைஞர் ஒருவர், போலீஸ் என்று கூறி விசாரணை நடத்தினார். கடையில் இருந்த விநாயகத்தின் மகனிடம் ஸ்டாம்ப் வாங்கி வரக்கூறி இளைஞர் வெளியே அனுப்பியுள்ளார். விநாயகம் மகன் திரும்புவதற்குள் கடை கல்லா பெட்டியில் இருந்த 2,300 மற்றும் செல்போனுடன் இளைஞர் தப்பினார்.

Related Stories: