×

இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று 1,500 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் இன்று சற்று உயர்ந்து 2,000 கடந்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வரும் நிலையில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500ஆக இருந்த நிலையில் இன்று 2,151 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் முதல் 152 நாட்களுக்குப் பிறகு இந்தியாவின் கொரோனா தொற்று வழக்குகள் மீண்டும் 2000-ஐ தாண்டியது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மீண்டும், மீண்டும் புது வகையான வைரஸ் காய்ச்சல் பொதுமக்கள் தாக்கி அச்சத்தை ஏற்படுத்தியது.

Tags : India ,Union Health Ministry , 2,151 new coronavirus cases confirmed in India in one day: Union Health Ministry
× RELATED இந்தியாவில் மின்னணு வாக்கு...