×

சபாநாயகருடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சந்திப்பு: எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரிக்கை..!

சென்னை: சென்னையில் சபாநாயகர் அப்பாவுவுடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அருகே எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை நிகழ்வின் போது எடப்பாடி பழனிசாமியும் , ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்ந்து அவை நடவடிக்கையில் பங்கேற்று வந்தனர். இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் பதவி மற்றும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கை நேற்று தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பு வந்த சிறிது நேரத்தில் எடப்பாடி பழனிசாமி, பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் சென்னையில் சபாநாயகர் அப்பாவுவுடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம், இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகருடன் சந்தித்து பேசினார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கக்கூடாது என்று அதிமுக கொறடா சபாநாயரிடம் தெரிவித்ததாகவு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : AIADMK ,S.P. Velumani ,Vice-President ,RB ,Udayakumar , AIADMK whip S.P. Velumani meeting with the Speaker: Demand to allocate the seat of the opposition vice-leader to RB Udayakumar..!
× RELATED விமான விபத்தில் மலாவி துணை அதிபர்...