×

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் வரும் 4ம் தேதி மூடல்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் 4ம் தேதி மூடப்படும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கை: வருகின்ற 4ம்  தேதி செவ்வாய் கிழமை அன்று மகாவீர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு இந்த மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகள், ஹோட்டல்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Mahavir Jayanti , Liquor shops to be closed on 4th due to Mahavir Jayanti: Collector Information
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...