ராமேஸ்வரம் கோயிலில் மூன்று மாதத்தில் ரூ. 4.45 கோடி உண்டியல் வசூல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி அணிகலன் உள்ளிட்ட பொருட்கள் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்படுகிறது. உண்டியலில் போடப்படும் காணிக்கைகள் மாதந்தோறும் இறுதி வாரத்தில் திறந்து எண்ணப்படுகிறது. இந்த ஆண்டு துவங்கி கோயில் உண்டியலில் பக்தர்களால் காணிக்கையாக போடப்பட்ட தொகை ஜனவரியில் ரூ.1 கோடியே 50 லட்சத்து 95 ஆயிரத்து 882, பிப்ரவரியில் ரூ.1 கோடியே 19 லட்சத்து 82 ஆயிரத்து 629 வசூலானது.  நடப்பு மார்ச் மாதத்திற்கான உண்டியல் திறப்பு கோயில் துணை கமிஷனர் மாரியப்பன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை தொகை ரூ.1 கோடியே 74 லட்சத்து 87 ஆயிரத்து 154 வசூலாகி இருந்தது. மாதந்தோறும் கோயில் உண்டியல் காணிக்கை வசூல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 3 மாதத்தில் மட்டும் ரூ.4 கோடியே 45 லட்சத்து 65 ஆயிரத்து 665 உண்டியல் மூலம் வருவாய் வந்துள்ளது.

Related Stories: