×

சட்டீஸ்கர், ஆந்திராவில் அமலாக்கத்துறை சோதனை

புதுடெல்லி:  சட்டீஸ்கரில் நிலக்கரி வரி வசூல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளில் ரூ.540 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரி சவுமியா, நிலக்கரி வர்த்தகர் சூர்யகாந்த் திவாரி உட்பட  9 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் நேற்று சட்டீஸ்கர் மற்றும் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.Tags : Directorate ,Chhattisgarh, Andhra Pradesh , Enforcement Directorate raids in Chhattisgarh, Andhra Pradesh
× RELATED திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு...