×

காரப்பாக்கத்தில் பெண் படுகொலை 4வதாக ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் கள்ளக்காதலன் தீர்த்துக்கட்டியது அம்பலம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

துரைப்பாக்கம்: காரப்பாக்கத்தில் பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 4வதாக ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் 3வது கள்ளக்காதலன் தீர்த்துக்கட்டியது அம்பலமாகியுள்ளது. சென்னை காரப்பாக்கம் கந்தசாமி நாயக்கர் தெருவில் வசித்து வந்தவர் மல்லிகா (40). இவரது கணவர் இறந்து விட்டார். இவரது மூத்த மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குளத்தில் மூழ்கி இறந்து விட்டார். இளைய மகன், தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, லாரி கிளீனராக வேலை செய்து வருகிறார். கணவர் இறந்த பிறகு, முருகன் என்பவரை மல்லிகா 2வது திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கண்ணகி நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருடன் மல்லிகாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளாக நீடித்தது. முருகன், இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து மல்லிகாவுடன் ஜெயக்குமார் ஜாலியாக இருந்து சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 26ம் தேதி இரவு 11.30 மணியளவில் மல்லிகாவை பார்க்க அவரது இளைய மகன், வீட்டுக்கு வந்தபோது, முகம் மற்றும் தலையில் பலத்த காயத்துடன் மல்லிகா இறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்து அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

தகவலின் பேரில் கண்ணகி நகர் போலீசார் விரைந்து வந்து மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை நேற்று முன்தினம் இரவு பிடித்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. மல்லிகா 2வது கணவருடன் வசித்தபோது, கண்ணகி நகரைச் சேர்ந்த ஜெயக்குமாருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது இருவரும் தனிமையில் ஜாலியாக இருந்துள்ளனர். சம்பவத்தன்று இரவு மல்லிகா வீட்டுக்கு ஜெயக்குமார் வந்துள்ளார்.

அங்கு, அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் மல்லிகாவுடன் நெருக்கமாக இருந்துள்ளார். ஜெயக்குமார் வந்ததும் அவர், அங்கிருந்து வெளியே சென்றுள்ளார். பாண்டியன் எதற்கு இந்த நேரத்தில் இங்கு வந்த செல்கிறான், என ஜெயக்குமார் கேட்டபோது, மல்லிகா முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர், மல்லிகாவும், ஜெயக்குமாரும் மது அருந்திவிட்டு ஜாலியாக இருந்தனர். சிறிது நேரத்தில் இதுதொடர்பாக, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தலை முடியைப் பிடித்து இழுத்து, மல்லிகாவை ஜெயக்குமார் சுவற்றில் அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார். இதையடுத்து, ஜெயக்குமார் அங்கிருந்து தப்பியது தெரியவந்தது. இதையடுத்து, ஜெயக்குமாரை கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Karapakkam , Karapakkam murder of woman 4th due to contact with one person, extortionist solved Ambalam: Shocking information in investigation
× RELATED ஐகோர்ட் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா...