×

புதிய நெருக்கடி: அதானி குழுமத்தை சேர்ந்த அனைத்து நிறுவனங்களின் பங்கு விலை கடும் சரிவு..!!

மும்பை: அதானி குழுமத்தைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்து வர்த்தகமாகி வருகின்றன. விலை சரிந்து கொண்டிருக்கும் அதானி குழும பங்குகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்ததாக சர்ச்சை எழுந்தது. அதானி நிறுவனப் பங்குகளில் பணத்தை முதலீடு செய்ததால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு இழப்பு என புகார் தெரிவிக்கப்பட்டது. அதானி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ள இ.பி.எஃப். தொகையைத் திரும்ப பெறுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அதானி குழும நிறுவனங்கள் அனைத்தின் பங்குகளும் விலை குறைந்துள்ளன.  ஜனவரி 24ம் தேதி ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து பல பெரிய முதலீட்டு நிறுவனங்கள் அதானி குழும முதலீடுகள் குறித்து மறுஆய்வு செய்வது மட்டும் அல்லாமல், ஏற்கனவே முதலீடு செய்து இருப்பில் வைத்துள்ள பங்குகளை என்ன செய்வது என தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.

அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை ரூ.100 சரிவு

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கு விலை ரூ.115.50 சரிந்து ரூ.1,608.55-க்கு விற்பனையாகி வருகிறது. அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலை ரூ.53 சரிந்து ரூ.1,015-க்கும், அதானி டோட்டல் கேஸ் பங்கு விலை ரூ.48 சரிந்து விற்பனையாகி வருகிறது. அதானி கிரீன் எனர்ஜி பங்கு ரூ.49.25 சரிந்து ரூ.935.65-க்கும், அதானி போர்ட்ஸ் பங்கு விலை ரூ.36.40 சரிந்து ரூ.592-க்கும் விற்பனையாகிறது. அதானி வில்மர் பங்கு விலை ரூ.18 சரிந்து ரூ.369-க்கும், ஏசிசி பங்கு விலை ரூ.77 சரிந்து ரூ.1,609-க்கும் விற்பனையாகி வருகிறது.

Tags : Adani Group , Adani Group, company, share price decline
× RELATED சிமெண்ட் துறையில் ஆதிக்கம்: அதானி குறித்து காங். எச்சரிக்கை