×

அனைத்து அதானி குழும நிறுவன பங்கு விலை கடும் சரிவு

மும்பை: அதானி குழுமத்தைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்து வர்த்தகமாகி வருகின்றன. விலை சரிந்து கொண்டிருக்கும் அதானி குழும பங்குகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அதானி நிறுவனப் பங்குகளில் பணத்தை முதலீடு செய்ததால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு இழப்பு என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ள இ.பி.எஃப். தொகையைத் திரும்ப பெறுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அதானி குழும நிறுவனங்கள் அனைத்தின் பங்குகளும் விலை குறைந்துள்ளன.

Tags : Adani Group , Share prices of all Adani Group companies fell sharply
× RELATED சிமெண்ட் துறையில் ஆதிக்கம்: அதானி குறித்து காங். எச்சரிக்கை