சுய உதவி குழு கடன் விண்ணப்பத்தின் அடிப்படையில் கடனுதவி உடனடியாக அளிக்கப்பட்டு வருகிறது: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவியை விரைந்து வழங்க அரசு ஆவண செய்யுமா? என சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ ஜிகே மணி கேள்வி எழுப்பினார் இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; சுய உதவி குழு கடன் விண்ணப்பத்தின் அடிப்படையில் கடனுதவி உடனடியாக அளிக்கப்பட்டு வருகிறது. சுய உதவிக் குழுக்களுக்கு கொடுக்கப்படும் கடன் உதவியை கடன் தொகையாக பார்க்கவில்லை. சுய உதவி குழுக்களுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது எனவும் கூறினார்.

Related Stories: