லாலுவுக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த வழக்கில் லாலுபிரசாத் யாதவிற்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் சிபிஐ சார்பில் பதியப்பட்டுள்ளன. இதில் தோரந்தா கருவூல மோசடி வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற லாலு இந்த வழக்கில் ஜாமீன் பெற்றுள்ளார். இதை எதிர்த்து சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் அஜய் ரஸ்ேதாகி, பெல்லா எம் திரிவேதி அடங்கிய அமர்வு விசாரித்தது. சிபிஐ மனுவின்படி லாலுவுக்கு நோட்டீஸ் அனுப்ப மறுத்த நீதிபதிகள் இந்த வழக்கை மற்ற வழக்குகளுடன் சேர்ந்து விசாரிக்கப்போவதாக அறிவித்தனர்.

Related Stories: