சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 3 வாலிபர்கள் சரண்

விழுப்புரம்: சென்னையில் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் வெட்டிகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மூன்று வாலிபர்கள் விழுப்புரம் கோர்ட்டில் இன்று சரண் அடைந்தனர். சென்னை அடையாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெய்கணேஷ் கடந்த 25ஆம் தேதி மூன்று இளைஞர்களால் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த மன்னன் மகன் முருகன் (26), நுங்கம்பாக்கம் தெற்கு மாட வீதியை சேர்ந்த வேலு மகன் பிரவீன்(23), மண்ணூர்பேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சின்னராசு மகன் தர் (27) ஆகிய மூன்று இளைஞர்கள் இன்று காலை விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ராதிகா முன்னிலையில் சரணடைந்தனர். நீதிமன்றம் புறக்கணிப்பு இந்தநிலையில் வக்கீல் படுகொலைக்கு நீதி கேட்டு வழக்கறிஞர்கள் இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories: