×

ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பான வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பான வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 50 இடங்களில் ஒரே நாளில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் முகுல் ரோஹத்கி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக 5 இடங்களில் பேரணி நடத்துவதற்கு முதலில் அனுமதி வழங்கமுடியும். பேரணிக்கு முழு தடைவிதிக்கவில்லை; நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் பேரணி நடத்த சட்டத்தில் இடமில்லை என்று அரசு கூறியது.

Tags : RSS Supreme Court , RSS Rally, Judgment, Supreme Court
× RELATED நாளை நடைபெறும் மக்களவை கூட்டத்தில்...